Seeman : 2 பெண்கள் என்னை வன்கொடுமை செய்துவிட்டார்கள்.! பொது மன்னிப்பு கேட்க வேண்டும்.! சீமான் பரபரப்பு பேட்டி.!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் , தன்னை காதலித்து திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிவிட்டார் என்று நடிகை விஜயலட்சுமி புகார் கூறி சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சில வாரங்களுக்கு முன்னர் புகார் அளித்து இருந்தார்.
இந்த புகாரை அடுத்து, புகார் அளித்த நடிகை விஜயலட்சுமியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதன் பிறகு சீமான் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என கூறப்பட்டது. முதலில் சீமானுக்கு பதிலாக அவரது வழக்கறிஞர்கள் ஆஜராகி இருந்தனர்.
இதனை அடுத்து சீமான் செப்டம்பர் 18 (இன்று) வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி வேண்டும் என்று மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டு இருந்து. இதற்கிடையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடிகை விஜயலட்சுமி தனது புகாரை வாபஸ் பெற்றுக்கொண்டார்.
சீமான் சாருடன் நான் போனில் பேசினேன். இங்கு சீமானுக்கு அதிக பவர் உள்ளது. அவரை ஒன்னும் செய்ய முடியாது. நான் மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளேன். என்னால் இவ்வளவு தான் போராட முடியும். நான் பெங்களூருவுக்கே செல்கிறேன் என கூறிவிட்டு சீமான் மீது அளித்த புகாரை திரும்ப பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில், புகாரை நடிகை விஜயலட்சுமி திரும்ப பெற்றாலும், சம்மன் கொடுத்தப்படி சீமான் விளக்கம் அளிக்க வேண்டும் என கூறப்பட்டதால், இன்று சீமான் தனது மனைவி கயல்விழி மற்றும் வழக்கறிஞர்களுடன் ஆஜாரானார். ஆஜராகி பின்னர் வெளியே செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவர் கூறுகையில், விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பின்னணியில் அவருக்கு துணையாக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தான் இருந்தது. என் மீது 128 வழக்குகள் உள்ளது. அவைகள் போராட்ட வழக்குகள். அதனை விடுத்து, இந்த வழக்கை எடுத்தால் பெண்களை சம்பந்தபடுத்தி என்னை அசிங்கப்படுத்திவிடலாம். என இந்த வழக்கு பதியப்பட்டது.
முதலில் திருமணம் என்ற புகாரை சொல்லவில்லை, தற்போது சொல்கிறார்கள். 40 பவுண் நகை கொடுத்தாக சொல்கிறார்கள். 60 லட்சம் பணம் கொடுத்ததாக சொல்கிறார்கள். காவல்துறையினர் அதனை கேட்டார்கள். நான் யில்லை என கூறினேன்.
எதோ பெண்களை நான் ஏமாற்றிவிட்டேன் என கூறினார்களே, இந்த பெண்களால் நான் 13 ஆண்டுகளாக வன்கொடுமை அனுபவித்து வருகிறேன் . பெண் வன்கொடுமையை பற்றி தான் பேசுவார்களா.? ஆண் வன்கொடுமை பற்றி பேச மாட்டீர்களா.? வாய்க்கு வந்ததை எல்லாம் குற்றச்சாட்டாக கூறுகிறார்கள். என்னிடம் பணம் கேட்டு பேரம் பேசவில்லை என சீமான் கூறினார்.
சீமான் மனைவி உடன் வந்தது குறித்து கேட்டதற்கு, அவள் வக்கீல் அதனால் உடன் வருவேன் என்றால் வா என அழைத்து வந்தேன் என கூறிவிட்டு , நான் கொள்கைக்காக போராடுகிறேன். விஜயலட்சுமி மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்பட்ட வீரலட்சுமி நீதிமன்றத்தில் வந்து பொது மன்னிப்பு கேட்க வேண்டும். மான நஷ்டஈடு வழக்கு எல்லாம் மானம் உள்ளவர்களுக்கு தான் போட முடியும். வழக்கு 20ஆம் தேதி வருகிறது. அப்போது நான் ஆஜராவேன். அப்போது அவர்களும் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும்.