இராணுவ வீரருக்கு ‘வீர் சக்ரா விருது’;நாட்டுபற்றின் அடையாளம் – முதல்வர் ஸ்டாலின்!
சென்னை:கடந்தாண்டு கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற சீன தாக்குதலில் உயிரிழந்த இராணுவ வீரர் பழனி அவர்களுக்கு வீர் சக்ரா விருது அளித்திருப்பது பெருமைக்குரியது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் பழனி, கடந்தாண்டு கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற சீன தாக்குதலில் உயிரிழந்தார். இதனையடுத்து,அவருக்கு வீர் சக்ரா விருது அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று ஹவில்தார் பழனி சார்பில் அவரது மனைவியிடம், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மகாவீர் சக்ரா விருதை வழங்கினார்.
உயிரிழந்த இராணுவ வீரர் பழனி அவர்களுக்கு வீர் சக்ரா விருது அளித்திருப்பது பெருமைக்குரியது என்றும்,அவரது வீரம் நாட்டுபற்றறின் அடையாளம் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
“வரலாற்றில் நிறைந்து வாழும் இராணுவ வீரர் பழனி அவர்களுக்கு வீர் சக்ரா விருது அளித்திருப்பது பெருமைக்குரியது. கல்வான் பள்ளத்தாக்கில் அவர் காட்டிய தீரம் தமிழர்களது நாட்டுப்பற்றின் அடையாளம்”,என்று பதிவிட்டுள்ளார்.
வரலாற்றில் நிறைந்து வாழும் இராணுவ வீரர் பழனி அவர்களுக்கு வீர் சக்ரா விருது அளித்திருப்பது பெருமைக்குரியது.
கல்வான் பள்ளத்தாக்கில் அவர் காட்டிய தீரம் தமிழர்களது நாட்டுப்பற்றின் அடையாளம்! https://t.co/mKioYrP43L
— M.K.Stalin (@mkstalin) November 23, 2021