வேதாரண்யத்தில் நேற்று பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதி முழுவதையும் பரபரப்பாக்கியது. இதனால் அப்பகுத்தியில் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. பொதுமக்கள் ஸ்தம்பித்தனர். இதற்குக் காரணம் என்னவென்று விசாரிக்கையில்,
வேதாரண்யம், ராமகிருஷ்ணபுரத்தை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் மீது பாண்டியன் என்பவரின் கார் மோதி விபத்துக்குள்ளாகக்கியது. இதில், ராமச்சந்திரன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்..அதேவேளையில் பாண்டியனின் கார் டிரைவர் அந்த காருடன் வேதாரண்யம் காவல் நிலையத்திற்கு சென்றார். அப்போது, வந்த ஒரு பத்து பேர் காவல் நிலையத்தில் கல்வீசியும், அந்த காரை சேதப்படுத்தியும் அந்த காரை எரித்துவிட்டனர்.
தகவல் அறிந்து வந்த உடன் தீயணைப்பு படையினர் தீயை அணைக்க முற்பட்ட போது. அவர்களை அக்குறிப்பிட்ட பிரிவினர் தடுத்து நிறுத்தி விட்டனர். இதனால், கார் முழுவதும் ஏரிந்து விட்டதாக தெரிகிறது. இதையடுத்து இன்னொரு தரப்பினர் பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த டாக்டர் அம்பேத்கர் சிலையை உடைத்தனர். இதனால், அங்கு பதற்றமான சூழல் உருவானது. பேருந்துகள் சில நிறுத்தப்பட்டன. பொது மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து சென்னை மற்றும் மதுரையில் விடுதலை சிறுத்தை கட்சியினர் தீவிரமாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், சென்னையில் நடந்த போராட்டத்தில் போலீஸ்காரர்களுக்கும் விசிக கட்சியினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பேசுகையில், ‘சிலையை உடைத்தவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படவேண்டும். தமிழகம் சாதி பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்து மீட்க அனைவரும் இதற்காக குரல் கொடுக்க வேண்டும்.’ என கேட்டுக் கொண்டார்.
இதற்கிடையில் உடைக்கப்பட்ட சிலைக்கு பதிலாக புதிய அம்பேத்கர் சிலையை தமிழக அரசு சார்பில் பலத்த பாதுகாப்போடு பேருந்து நிலையத்தில் மீண்டும் நிறுவபட்டது. தற்போது பேருந்துகள் வேதாரண்யத்தில் வாழக்கம் போல ஓடுகின்றன. பதற்றமான நிலைமை தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…