வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் சுற்றளவைக் குறைக்கும் முடிவை திரும்பப் பெறுகிறது தமிழ்நாடு அரசு.
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் சுற்றளவை குறைக்கும் முடிவை திரும்பப் பெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின் போது தேசிய வன உயிர் வாரியத்திடம் வழங்கப்பட்ட விண்ணப்பத்தை திரும்ப பெறப்படுவதாக தலைமை காட்டுயிர் பாதுகாவலர் நீரஜ், துறையின் முதன்மை செயலருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். சரணாலயத்தின் சுற்றளவை 5 கி.மீல் இருந்து 3 கி.மீ-ஆக குறைக்க முடிவு செய்யப்பட்ட நிலையில் வாபஸ் பெறப்பட்டது.
கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி தேசிய வனஉயிர் வாரியத்திடம் தமிழ்நாடு அரசு விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பித்தது. அதில், கட்டுமானங்களை கட்ட முடியாத காரணத்தால் உள்ளூர் மக்களை பறவைகள் சரணாலய பாதுகாப்பு மற்றும் மேலாண்மை பணியில் ஈடுபடுத்த முடியவில்லை.
ஏரியைச்சுற்றி முதல் 3 கிலோமீட்டர் சுற்றளவில் மட்டுமே தற்போது விவசாயம் நடப்பதாகவும் 3 முதல் 5 கிலோமீட்டர் சுற்றளவில் விவசாயம் கைவிடப்பட்டதால் பறவைகள் வருவதில்லை எனவும், அப்பகுதியில் கட்டுமானங்கள் எழுப்பும்போதும், நிலப்பயன்பாட்டை மாற்றும்போதும் கிராம மக்களுக்கும் வனத்துறையினருக்குமிடையே பிரச்னைகள் எழுகிறது.
இதனைத் தடுக்க வேடந்தாங்கல் சரணாலயத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியை 5 கி.மீ சுற்றளவிலிருந்து 3 கி.மீ சுற்றளவிற்கு குறைக்க வேண்டும் என அதில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இத்தகைய முன்மொழிவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும், எனவே சுற்றுசூழல் பாதுகாப்பு மற்றும் வாழ்விட சூழலியல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சுற்றளவை குறைக்கும் முடிவை வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…