ஆதிதிராவிடர் மீது காவல்துறை அணுகுமுறை கடுமையாக உள்ளது என விசிக தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டி உள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலுக்குள் பட்டியல் இனத்தவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்த விவகாரம் தொடர்பாக தற்போது அந்த கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. பட்டியல்இனத்தவர்களை கோவிலுக்குள் அனுமதிக்க மறுத்த விவகாரம் குறித்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக அக்கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை அவர் முன் வைத்தார்.
திருமாவளவன் பேசுகையில், தமிழகத்தில் ஆதிதிராவிடர்களை காவல்துறையினர் அணுகும் முறை மிகவும் கடுமையாக இருக்கிறது. தலித் வீதிகளில் அவர்கள் உள்ளே சென்று தாக்குதல் நடத்துகிறார்கள். மற்ற எந்த சமூகத்தினருக்கும் இப்படி நடப்பது இல்லை. இதனை அரசு அதிகாரத்தில் இருப்பவர்கள் முழுதாக தட்டி கழித்து விட முடியாது. அதேபோல் அவர்கள் தான் காரணம் என்று முழுதாக கூறி விடவும் முடியாது. இதனை அரசு தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் அனைவருக்கும் வழிபாட்டு முறை இருப்பதை உறுதி செய்து, அதற்கான அறிக்கையை இந்து அறநிலையத்துறை முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதனை பொதுமக்கள் பார்வைக்கு முதல்வர் வெளியிட வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அந்த ஆர்ப்பாட்டத்தில் கேட்டுக்கொண்டார்.
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…