நாடாளுமன்ற தேர்தல் 2019: வேட்பாளரை அறிவித்தார் தொல். திருமாவளவன்!!
- இடைத் தேர்தலும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் அதே தேதியில்தான் நடைபெற இருக்கிறது.
- திமுகவுடன் கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி வருகின்ற தேர்தலில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் இரு தொகுதிகளிலும் போட்டி இடுகிறது.
இந்தியாவில் 2019ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டமாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக ஏப்ரல் 11ஆம் தேதி ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் உட்பட 91 மக்களவை தொகுதியில் நடைபெறுகிறது.
தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக கூட்டணிக் கட்சிகள் மற்றும் தொகுதி பங்கீடுகள் அனைத்தும் முடிவடைந்து விட்டன.
திமுக மற்றும் அதிமுக இரண்டும் தலா 20 தொகுதிகளில் போட்டியிடுகின்றன மற்ற பகுதிகளை கூட்டணிக் கட்சிகள் பங்கிட்டுக் கொண்டனர்.
தமிழகத்தில் 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 18 தொகுதிகளில் மட்டுமே தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த இடைத் தேர்தலும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் அதே தேதியில்தான் நடைபெற இருக்கிறது.
திமுகவுடன் கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி வருகின்ற தேர்தலில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் இரு தொகுதிகளிலும் போட்டி இடுகிறது. இதற்கான வேட்பாளர்களை இன்று சென்னை விசிக தலைமையகத்தில் அறிவித்தார் தலைவர் தொல். திருமாவளவன்.
விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் உதயசூரியன் சின்னனத்தில் போட்டியிட உள்ளார். அதேநேரம், சிதம்பரம் தொகுதியில் தொல். திருமாவளவன் அக்கட்சிக்காக ஒதுக்கப்படவுள்ள சின்னத்தில் போட்டியிட உள்ளார்.