களைகட்டிய பக்ரீத் கொண்டாட்டம்! 1 கோடிக்கு விற்பனையான ஆடுகள்!
பக்ரீத் : உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை என்றால் ‘பக்ரீத்’ பண்டிகை என்று கூறலாம். இன்று ஜூன் 17-ஆம் தேதி உலகம் முழுவதும் பண்டிகை விறு விறுப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பக்ரீத் பண்டிகை ஆரம்பித்துவிட்டது என்றால் அந்த வாரம் முழுவதும் ஆடு விற்பனை சூடு பிடித்துவிடும். வெளி நாடுகளில் எல்லாம் ஒரு ஆடு மட்டுமே லட்ச கணக்கில் வாங்கும் சம்பவங்களையும் பார்த்து இருக்கிறோம்.
இந்நிலையில், தமிழகத்திலும் பக்ரீத் பண்டிகையை மக்கள் கொண்டாடி வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள பல ஆட்டு சந்தைகளிலும் ஆடு விற்பனை களைகட்டிவருகிறது. அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் வாழப்பாடியில் உள்ள ஆட்டுச் சந்தையில் இதுவரை ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஆகி உள்ளது.
வரத்துக் குறைவாக இருந்ததால் 1 ஆடு ரூ7,000 முதல் ரூ25,000 வரை கிலோவுக்கு ஏற்றது வகையில் விற்பனையாகின. மேலும், இதற்கு முன்னதாக பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நேற்று சேலம் மாவட்டத்தின் மேட்டூர் அருகே நங்கவள்ளி சந்தையில் ரூ. 2 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.