வரம் தரும் வயலூர்….சிங்கார வடிவேல்…….கந்தசஷ்டி விழா தொடங்குகிறது…!!!

Published by
kavitha

பிரசித்தி பெற்றதும் சிறப்பு பெற்றதுமான முருகன் கோவில்களுள் திருச்சி வயலூர் முருகன் கோவிலும் குறிப்பிட்டு சொல்லக்கூடியதாகும். இத்தகைய சிறப்பு பெற்ற இக்கோவிலில் முருகன் காட்சி தருகிறார் அய்யன் முருகன் முருகன் என்றாலே தமிழ்கடவுள் என்றும் சம்ஷாரத்திற்கு பேர் போனவர் அய்யன் முருகன் தன்னை போர் புரிய வந்த சூரனையும் தன் அன்பால் மாற்றி மயிலாக மாற்றிவர் முருகன் என்று புராணங்கள் கூறுகின்றன.

Related image

இத்தகைய சிறப்பு வாய்ந்தாக  நடைபெறும் விழாக்களில் கந்தசஷ்டி விழா சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா வருகிற 8-ந் தேதி தொடங்கி 14-ந் தேதி வரை நடை பெறுகிறது.

வயலூரில் இவ்விழாவின் முதல் நாளான  காலை 7 மணிக்கு கணபதி ஹோமமும் சிறப்பு அபிஷேகமும்  இதனையடுத்து அய்யன் சுப்பிரமணிய சுவாமிக்கு சண்முகார்ச்சனையும் நடைபெறுகிறது. இதன் பின்னர் மாலை 6 மணிக்கு அய்யனுக்கு ரக்‌ஷா பந்தனமும் சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெறுகிறது. இரவு சிங்காரவேலர் பச்சை மயில் வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு ஆசிர்வதிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

மேலும் 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை சரியாக காலை 8 மணி அளவில் சிங்காரவேலர் கேடயத்தில் வீதி உலா வருவர் இதனையடுத்து சுப்பிரமணியசாமிக்கு லட்சார்ச்சனையும் மதியம் சண்முகார்ச்சனையும் சிறப்பாக நடைபெறுகிறது. கந்த சஷ்டி நாட்களில் இரவு 8 மணிக்கு  சிங்காரவேலர் சேஷ வாகனம் , அன்னம் வாகனம் வெள்ளிமயில் போன்ற வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்காட்சி அளிக்கிறார்.


நான்காம் நாளான 11-ந் தேதி இரவு 8 மணிக்கு சிங்காரவேலர் யானைமுக அசுரனான சூரனுக்கு பெருவாழ்வு அளிக்கின்ற கண்கவர் நிகழ்ச்சியும் 12-ந் தேதி இரவு 8 மணிக்கு சிங்காரவேலர் அசுரனான சிங்கமுக சூரனுக்கு பெருவாழ்வு அளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

விழாவிம் முக்கிய நிகழ்வான சூர வதம் 13-ந் தேதி காலை 9 மணிக்கு சண்முகார்ச்சனையை தொடர்ந்து 10.45 மணியளவில் சூரபதுமனை வதம் செய்வதற்கு சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. சக்திவேலை பெற்று கொண்டு அய்யன் சிங்காரவேலர் போருக்கு இரவு 7.30 மணியளவில் ஆட்டுக்கிடா வாகனத்தில் எழுந்தருளி அசுரன் சூரனின் ஆணவத்தை அழித்து அசுரனுக்கு பெருவாழ்வு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வதத்தை தொடர்ந்து முத்துக்குமாரசுவாமி வெள்ளி கேடயத்தில் எழுந்தருளு காட்சி அளிக்கிறார்.

போர் முடிந்து திரும்பிய அய்யனுக்கு 14-ந் தேதி காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் சண்முகார்ச்சனை நடைபெறுகிறது. அய்யனுக்கு இரவு 7 மணியளவில் தேவசேனா சுப்பிரமணியசுவாமி திருக்கல்யாணம் வெகுச்சிறப்பாக நடைபெறுகிறது. பக்தர்களின் வசதிக்கு ஏற்ப செல்ல சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இந்தாண்டு கந்தசஷ்டி விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் ராணி ஆலோசனையின் படி நிர்வாக அதிகாரி சுரேஷ் மற்றும் ஊழியர்கள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

DINASUVADU

Recent Posts

சென்னை, காஞ்சிபுரம் 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…

6 hours ago

தமிழகத்தில் வியாழன் கிழமை (26/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…

6 hours ago

வந்தாச்சு விடாமுயற்சி அப்டேட்! முதல் பாடல் இந்த தேதியில் தான் வெளியீடு!

சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…

6 hours ago

நான் தான் நம்பர் 1! டெஸ்ட் தரவரிசையில் அஸ்வின் சாதனையை சமன் செய்த பும்ரா!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…

7 hours ago

பாலியல் வன்கொடுமை – த.வெ.க தலைவர் விஜய் கடும் கண்டனம்!

சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…

7 hours ago

பாலியல் வன்கொடுமை- யார் இந்த ஞானசேகரன்? விசாரணையில் வந்த பகீர் தகவல்!

சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…

8 hours ago