வசந்தகுமார் இறப்பு – கே.எஸ் அழகிரி கண்ணீர் மல்க அஞ்சலி.!

Published by
பாலா கலியமூர்த்தி

சென்னை தியாகராய நகரில் உள்ள எம்.பி. வசந்தகுமார் உடலிற்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி.

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 10-ஆம் தேதி கன்னியாகுமரி எம்.பி வசந்தகுமார் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி காலமானார். இவரின் மறைவிற்கு பிரதமர் உட்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். வசந்த குமார் இறந்ததற்கு பின் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த சோதனை முடிவில், அவருக்கு நெகட்டிவ் என வந்துள்ளது.

இதையடுத்து, அப்போலோ மருத்துவமனையில் இருந்து காங்கிரஸ் கொடி போர்த்தப்பட்டு ஆம்புலன்சில் மூலம் வசந்தகுமார் எம்.பி உடல் சென்னை தி.நகர் நடராஜன் தெருவில் உள்ள அவரது வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டது. தற்போது, பொது மக்கள் அஞ்சலிக்கு வசந்தகுமார் எம்பி உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் வசந்தகுமாரின் உடலிற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி மறைந்த வசந்தகுமார் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். இவருடன் கட்சி நிர்வாகிகம் மற்றும் உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர். இதையடுத்து, வசந்தகுமாரின் உடல் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் வைக்கப்படுகிறது. மதியம் 2 மணிக்கு மேல் சொந்த ஊரான கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரத்திற்கு கொண்டு செயல்படுகிறது. நாளை காலை 10 மணி அளவில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் காலமானார்.!

முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் காலமானார்.!

கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…

28 mins ago

“அமரன்” படக்குழுவிற்கு வரும் அச்சுறுத்தல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் – தமிழ்நாடு பாஜக!

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…

3 hours ago

அரசி எலிசபெத்தின் 77 ஆண்டுகள் பழமையான திருமண கேக்..பிரமாண்ட விலைக்கு ஏலம்!

ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…

3 hours ago

கங்குவா படத்தை வெளியிடத் தடையில்லை – சென்னை உயர் நீதிமன்றம்!

சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…

4 hours ago

விடுமுறை இல்ல!! நாளை அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படும்.!

சென்னை : தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை கொண்டாடும்…

4 hours ago

தமிழகத்தில் சனிக்கிழமை (09/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…

5 hours ago