கன்னியாகுமரி தொகுதி எம்பி வசந்தகுமார் உடல்நிலை கவலைக்கிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்தவகையில், சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், கன்னியாகுமரி தொகுதி எம்பி வசந்தகுமாருக்கும், அவரின் மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மையில் இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி எம்பி வசந்தகுமாருக்கு தற்போது வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பபட்டு வருகிறதாக தெரிவித்தார்.
இந்நிலையில் தமிழக சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்
பாடகர் எஸ்.பிபியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும் வசந்த குமார் எம்.பிக்கு தீவிர சிகிசக அளிக்கப்பட்டு வருவதாகவும் ஆனால் வசந்தகுமார் எம்.பி. உடல்நிலையும் கவலைக்கிடமாகத்தான் உள்ளது என்று தெரிவித்தார். மேலும் நல்லகண்ணுக்கு கொரோனா இல்லை விரைவில் வீடு திரும்புவார் என்று விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.
மதுரை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், அரசியல் களத்தில் 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது.…
கட்டாக் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் இன்று…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா துறையில் மட்டுமல்ல தனக்கு விருப்பமான ரேஸிங் துறையிலும் மிகுந்த உத்வேகத்துடன் கலந்து கொண்டு…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி…
சென்னை : மத்திய கல்வி கொள்கையின் PM Shri திட்டத்தில் தமிழ்நாடு இணைய வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து…