உள்ளத்தால், அரசியலால், தொழிலால், புகழால் உயர்ந்தவர் வசந்தகுமார் என கே.எஸ். அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி தொகுதி எம்.பியும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராக இருந்த H.வசந்தகுமார் கடந்த 10-ம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டதால் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிக்சை பெற்றுவந்த நிலையில், சிகிக்சை பலனின்றி H.வசந்தகுமார் காலமானார்.
H.வசந்தகுமார் மறைவிற்கு பல தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், வசந்தகுமாரின் மறைவு தமிழக காங்கிரசுக்கு பேரிழப்பு. கொரோனா காலத்தில் தனது தொகுதிக்கு வாரி வாரி வழங்கியவர் வசந்தகுமார். இவரது இழப்பு மிகுந்த வருத்தமளிக்கிறது.
மேலும், உள்ளத்தால், அரசியலால், தொழிலால், புகழால் உயர்ந்தவர் வசந்தகுமார், வசந்தகுமார் என்றால், காங்கிரஸ் என்றால் வசந்தகுமார் என வாழ்ந்தவர் என கே.எஸ். அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார்.
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…
சென்னை : தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை கொண்டாடும்…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…