மறைந்த வசந்தகுமாரின் உடல் அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கன்னியாகுமரி தொகுதி எம்.பியும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராக இருந்த H.வசந்தகுமார் கடந்த 10-ஆம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டதால் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிக்சை பெற்றுவந்த நிலையில், சிகிக்சை பலனின்றி H.வசந்தகுமார் உயிரிழந்தார்.
வசந்தகுமாரின் மறைவுக்கு பிரதமர் மோடி உட்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் சினிமா பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்தனர். மறைந்த வசந்தகுமாரின் உடல் சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகஸ்தீஸ்வரத்துக்கு கொண்டு வரப்பட்டு அவரது இல்லத்தில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.அங்கு பொதுமக்கள்,அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினார்கள். இந்நிலையில் வசந்தகுமாரின் உடல் அகஸ்தீஸ்வரத்தில் அவருக்கு சொந்தமான தோட்டத்தில் பொற்றோர் சமாதி அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…