வர்தா புயலால் பாதித்த மீனவர்களுக்கு அரசு 4 லட்சம் வழங்குவது குறித்து நான்கு வாரங்களுக்குள் பரிசீலித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2016-ம்ஆண்டு டிசம்பர் மாதம் தமிழகத்தின் புகுந்த வர்தா புயலின் போது கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 9 மீனவர்கள் மாயமாகினர். இதில் இருவரது உடல் மட்டும் நாகப்பட்டினம் கடற்கரையில் கரை ஒதுங்கியது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட 9 மீனவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து ரூ. 1 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட்டது. மேலும் பேரிடர் மேலாண்மை நிதியத்தில் இருந்து ரூபாய் 4 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என்று 2016 ஆண்டில் டிசம்பரில் அறிவிக்கப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மனுதாரரின் கோரிக்கை மனுவை நான்கு வாரங்களுக்குள் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும், இது குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 24-ம் தேதிக்கு தள்ளிவைத்தது.
சென்னை : இராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அமரன் திரைப்படம் தீபாவளி…
டெல்லி : 13 மாநிலங்களில் 48 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை இடைத்தேர்தல் முன்னிலை குறித்த நிலவரம் வெளியாகி…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் [நவம்பர் 23] இன்றைக்கான எபிசோடில் ரோகினியை மலேசியாவிற்கு டிக்கெட் போட சொல்லும் விஜயா. .அதிர்ச்சியில் …
தஞ்சை : மாவட்டத்தில் அ.தி.மு.கவின் கள ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணியும், திண்டுக்கல்…
மும்பை : மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு முன்னணி நிலவரங்கள் வெளியாகி வருகின்றன. இதில் காலை முதலே…
ராஞ்சி : ஜார்கண்டில் மொத்தமாக உள்ள 81 தொகுதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அதன்படி, முதல் கட்டமாக கடந்த…