“2 வருடமாக வர்தா புயலுக்கு மீனவர்க்கு வழங்கப்படாத இழப்பீட்டு தொகை”4 வாரத்திற்குள் பதில் வேண்டும்..! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேடு..!!

Default Image

வர்தா புயலால் பாதித்த மீனவர்களுக்கு அரசு 4 லட்சம் வழங்குவது குறித்து  நான்கு வாரங்களுக்குள் பரிசீலித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related image

கடந்த 2016-ம்ஆண்டு  டிசம்பர் மாதம் தமிழகத்தின் புகுந்த வர்தா புயலின் போது கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 9 மீனவர்கள் மாயமாகினர். இதில் இருவரது உடல் மட்டும் நாகப்பட்டினம் கடற்கரையில் கரை ஒதுங்கியது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட 9 மீனவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து ரூ. 1 லட்சம்  இழப்பீடாக வழங்கப்பட்டது. மேலும் பேரிடர் மேலாண்மை நிதியத்தில் இருந்து ரூபாய் 4 லட்சம்  இழப்பீடாக வழங்கப்படும் என்று 2016 ஆண்டில் டிசம்பரில் அறிவிக்கப்பட்டது.

 

ஆனால் இந்த இழப்பீடு தொகை இதுவரையும் வழங்கப்படவில்லை எனக் கூறி, சென்னையை சேர்ந்த பிரதீப் குமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், 4லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகையை உடனே வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

Related image

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மனுதாரரின் கோரிக்கை மனுவை நான்கு வாரங்களுக்குள் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும், இது குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 24-ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்