பழனியில் தைப்பூசத் திருவிழாவை ஒட்டி பல்வேறு கட்டுப்பாடுகள்.!
பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழாவை ஒட்டி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்த திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி.
தைப்பூச திருவிழாவை ஒட்டி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜனவரி 14 முதல் 31-ம் தேதி வரை ஒரு நாளைக்கு 25,000 பக்தர்கள் மட்டுமே பழனி கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி அறிவித்துள்ளார். மேலும், பழனி கோவிலுக்கு பக்தர்கள் தேங்காய், பழம் உள்ளிட்ட பூஜை பொருட்கள் கொண்டுவரக்கூடாது என்றும் அங்கபிரதட்சணம் போன்ற நேர்த்திக்கடன்கள் செய்யக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, வரும் ஜனவரி 28-ம் தேதி அன்று கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவை, பொது விடுமுறை நாளாக அறிவிக்கவும், இனிவரும் ஆண்டுகளிலும் தைப்பூசத் திருவிழா நாளை பொது விடுமுறை பட்டியலில் சேர்க்கவும் முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.