#BREAKING: முன்னாள் அமைச்சர் உட்பட பல்வேறு கட்சியினர் திமுகவில் இணைந்தனர்..!
அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிற கட்சிகளை சார்ந்தவர்கள் திமுகவில் இணைந்தனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிற கட்சிகளை சார்ந்தவர்கள் திமுகவில் இணைந்தனர். அண்ணா அறிவாலயத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த மாற்று கட்சியினர் திமுகவில் இணைந்தனர்.
ராமநாதபுரத்தை சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் வ.து நடராஜன் திமுகவில் இணைந்தார். அதேபோல அமமுகவை சேர்ந்த ம.சேகர், வ.து.ஆனந்த், முன்னாள் அமைச்சர் மகன் பட்டுக்கோட்டை செல்வமும் திமுகவில் இணைந்தனர்.