திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு ஊழல்கள்.. ஆளுநரிடம் புகார் – எடப்பாடி பழனிசாமி பேட்டி!

Edappadi Palanisamy

திமுக ஆட்சியின் முறைகேடுகள் குறித்து தமிழக ஆளுநரிடம் புகார் அளித்துள்ளோம் என இபிஎஸ் பேட்டி.

சென்னை சின்னமலையில் இருந்து கிண்டி ராஜ்பவன் (ஆளுநர் மாளிகை) வரை இன்று பேரணியாக சென்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மனு அளித்தார். அதாவது, போலி மது, கள்ளச்சாராயம் உயிரிப்பு விவகாரம், திமுக ஆட்சியில் ஊழல், சட்டம் ஒழுங்கு பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக ஆளுநரிடம் இபிஎஸ் மனு அளித்தார்.

எடப்பாடி பழனிசாமியுடன் சிவி சண்முகம், தங்கமணி, வேலுமணி, செல்லூர் ராஜு, ஜெயக்குமார் மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் உடன் இருந்தனர். விஷச்சாராயம் அருந்தி அருந்தி 23 பேர் உயிரிழந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி ஆளுநரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய எடப்பாடி பழனிசாமி, திராவிட மாடல் ஆட்சியில் 2 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் ஊழல் நடைபெறுகின்றன.

திமுக ஆட்சியின் முறைகேடுகள் குறித்து தமிழக ஆளுநரிடம் புகார் அளித்துள்ளோம். நேர்மையாக செயல்படும் அதிகாரிகள் திமுக அரசின் பாதிக்கப்படுகின்றன. கள்ளச்சாராயம், போலி மதுபானமும் அரசுக்கு தெரிந்தே விற்கப்படுகிறது. போலி மதுபானத்தால் இறந்ததை மறைக்க அரசு அதிகாரிகள் மூலம் தவறான தகவல்கள் பரப்ப முயற்சி செய்கின்றனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்காது என்றார்.

மேலும் இபிஎஸ் தொடர்ந்து பேசுகையில், ரவுடிகள், குற்றவாளிகள், திருடர்கள் காவல்துறையினருக்கு அச்சப்படுவதில்லை. வேங்கைவயல் சம்பவத்தில் இதுவரை ஒரு குற்றவாளிகளை கூட கைது செய்யவில்லை. டாஸ்மாக் பார்களில் அதிகளவில் போலி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. 75% மதுபான பார்கள் உரிய அனுமதி பெறாமல் இயக்கப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்