திருவண்ணாமலை, ஜன.8: தமிழக அரசின் வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் சான்றிதழ்கள் ஆன்லைன் மூலம் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இத்தகைய சான்றுகளுக்கு ஒப்புதல் வழங்க கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அரசு சார்பில் மடிக்கணினியும், இணையதள சேவைக்கு மோடமும் வழங்கப்பட்டு, அதற்கான கட்டணத்தை அரசே செலுத்தும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை இணையதளக் கட்டணத்தை அரசு செலுத்தவில்லை. இதையடுத்து, இணையதள கட்டணத்திற்கு பணம் வழங்கக் கோரி கிராம நிர்வாக அலுவலர்கள், கடந்த டிசம்பர் 15ம் தேதியிலிருந்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் 8ம் தேதி (இன்று) மாலை 6.30 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் இரவு நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
source: dinasuvadu.com
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…