VAO Murder Case : தூத்துக்குடி வி.ஏ.ஓ கொலை வழக்கு.! குற்றவாளிகள் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு.!
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே, கோவில்பந்து ஊராட்சி பகுதியில் ஊராட்சி மன்ற தலைவராக பணிபுரிந்து வந்த லூர்து பிரான்சிஸ் எனும் 53 வயது அரசு ஊழியரை கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி , விஏஓ அலுவலகத்திற்குள்ளே வைத்தே 2 பேர் கொடூரமாக வெட்டி கொலை செய்தனர்.
அவர் பொறுப்பு வகித்த பகுதியில் நடந்த மணல் கொள்ளையை தடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்த காரணத்தாலேயே இந்த கொலை நடந்தது என விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை முறப்பநாடு காவல்துறையினர் விசாரணை செய்து வந்தனர்.
இந்த கொலை வழக்கில் ராமசுப்பிரமணியன் எனும் ராமசுப்பு மற்றும் மாரிமுத்து ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையியல் இன்று இந்த வழக்கின் தீர்ப்பு கொடுக்கப்பட்டது. அதில், கொலையாளிகள் ராமசுப்பு மற்றும் மாரிமுத்து ஆகிய இருவருக்கும் ஆயுள்தண்டனை விதித்தும், 3000 ரூபாய் அபராதம் விதித்தும் நீதிபதி செல்வம் தீர்ப்பளித்தார்.