வன்னியர் இடஒதுக்கீடு – பாமக அரசுடன் இன்று பேச்சுவார்த்தை
வன்னியர் இடஒதுக்கீடு குறித்து இன்று பாமக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது.
தமிழகத்தில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கூறி பா.ம.க சார்பில் பல போராட்டங்கள் நடைபெற்றது. ஆனால், ஆளும் அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவின் கோரிக்கையை அதிமுக அரசு இதுவரை எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை.
இதனிடையே தான் அண்மையில் பாமக நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் , வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக தமிழக அரசு குழுவுடன் இன்று பேச்சுவார்த்தை சென்னையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டது. மேலும் இந்தப் பேச்சுகளின் முடிவைப் பொறுத்து நிர்வாகக் குழுவை மீண்டும் கூட்டி அரசியல் முடிவை எடுப்பது என்றும் பாமக நிர்வாகக் குழு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.