வன்னியர் 10.5% ஒதுக்கீடு – இன்று மேல்முறையீடு மனு விசாரணை..!

Published by
murugan

வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீடு ரத்துக்கு எதிராக தாக்கல் செய்த மேல்முறையீடு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி முந்தைய அரசு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து 25-க்கும் மேற்பட்டோர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். சட்டமன்ற தேர்தல் அறிவிப்பதற்கு சில நாட்களுக்கு முன்னதாக அரசியல் லாபத்திற்காக இந்த சட்டம் இயற்றப்பட்டதாக மனுவில் புகார் தெரிவித்தனர்.

முறையான சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்திய பின்னரே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற என மனுவில் தெரிவித்து இருந்தனர். இந்த வழக்கு கடந்த 1-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது உயர்நீதிமன்ற மதுரை கிளை வன்னியர் சமூகத்தினருக்கான10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது. வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டுக்கு வழங்கிய தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து நீதிபதிகள் துரைசாமி, முரளி சங்கர்  தீர்ப்பளித்துள்ளனர்.

மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீத ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5  சதவீத இட ஒதுக்கீடு தந்தது செல்லாதது. அரசு அளித்த விளக்கம் போதுமானதாக இல்லை எனக்கூறி நீதிபதிகள் இட ஒதுக்கீடு செல்லாது என தீர்ப்பு வழங்கினர். 10.5% வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் & தமிழ்நாடு சட்டத்துறை, பாட்டாளி மக்கள் கட்சி, மருத்துவர் ராமதாஸ், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் சார்பில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், 10.5% உள் ஒதுக்கீடு ரத்துக்கு எதிராக தாக்கல் செய்த மேல்முறையீடு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் நாகேஸ்வரராவ், பி.ஆர். காவாய், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.

Recent Posts

பாஜக மாநில தலைவருக்கான போட்டியில் நான் இல்லை! அண்ணாமலை பேச்சு!

பாஜக மாநில தலைவருக்கான போட்டியில் நான் இல்லை! அண்ணாமலை பேச்சு!

சென்னை :  தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…

45 minutes ago

RCBvsDC : டாஸ் வென்று டெல்லி பௌலிங் தேர்வு..அதிரடி காட்டுமா பெங்களூர்?

பெங்களூர் : புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணியும் இன்று…

57 minutes ago

ஐபிஎல்லை விட்டு விலகிய ருதுராஜ்! கேப்டனாக களமிறங்கும் தோனி!

சென்னை :  சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், காயம் காரணமாக ஐபிஎல் 2025…

2 hours ago

சிஎஸ்கே தொடர் தோல்வி…விமர்சனங்கள் குறித்து மௌனம் கலைத்த அஸ்வின்!

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த அளவுக்கு மோசமாக விளையாடமுடியுமோ அந்த அளவுக்கு இந்த சீசனில் விளையாடி வருவதாக…

2 hours ago

அமித்ஷா வருகை., “அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை.,” அண்ணாமலை பேட்டி!

சென்னை : தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு காலமே உள்ளதால் தற்போதே அரசியல் தேர்தல் களம் பரபரக்க…

3 hours ago

கோவை தனியார் பள்ளி விவகாரம் – பள்ளியின் முதல்வர் சஸ்பெண்ட்!

சென்னை : கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், கடந்த ஏப்ரல் 5-ம் தேதி பூப்பெய்திய…

3 hours ago