Vaniyambadi : பன்றி காய்ச்சலால் ஒருவர் உயிரிழப்பு.! மளிகை கடைகளை திறக்க 5 நாள் தடை.!
திருப்பதூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சியில் 34 வது வார்டு, நியூ டவுன் பகுதியை சேர்ந்த ரவிக்குமார் என்பவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இவர் சில நாட்களுக்கு முன்னர் தீவிர காய்ச்சல் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
சிகிச்சை பெற்று வந்த ரவிக்குமாருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது தெளிவானது. இதனை தொடர்ந்து பன்றி காய்ச்சலுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் தற்போது அவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனை தொடர்ந்து வாணியம்பாடி நகராட்சி ஆணையர் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதாவது, வாணியம்பாடி நகராட்சியில் அவர் மளிகைக்கடை நடத்தி வந்த பகுதியில் கடைகளும் 5 நாள்கள் திறக்க வேண்டாம் என்றும், அப்பகுதி சாலைகள் அனைத்தும் சுத்தப்படுத்தவும் சுகாதர ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவ குழுவினர், ரவிக்குமார் வசித்து வந்த பகுதிக்கு செல்ல உள்ளனர். அப்பகுதி மக்களுக்கு பன்றி காய்ச்சல் சோதனை நடத்த உள்ளனர். அப்பகுதி மக்கள் மாஸ்க் அணிந்து வெளியே வரவும் உத்தரவிடப்பட்டுள்ளனர்.