சென்னை-நெல்லை இடையே வந்தேபாரத்; ஆகஸ்ட்-6 இல் பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.!
சென்னையிலிருந்து திருநெல்வேலி வரை செல்லும் தமிழகத்தின் மூன்றாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி, வரும் ஆகஸ்ட்-6 ஆம் தேதி கொடியசைத்து துவங்கி வைக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் அதிவிரைவு ரயில் என அழைக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இந்தியாவில் 2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறையில் இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னை-நெல்லை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலோடு தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்படும் மூன்றாவது அதிவிரைவு ரயில் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் 658 கிமீ தொலைவை 8 மணிநேரத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் கடக்கும் எனவும்,எட்டு பெட்டிகளுடன் இயக்கப்படும் எனவும் ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மதுரை மற்றும் திருச்சி என இரண்டு நிறுத்தங்களில் மட்டும் இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்படுகிறது. இந்தியாவில் இதுவரை 25 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் சென்னை-மைசூர் மற்றும் சென்னை-கோவையை அடுத்து வரும் ஆகஸ்ட்-6 ஆம் தேதி முதல் தமிழக்தில் மூன்றாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.