Vande Bharat Metro Train [File Image]
சென்னை : வந்தே பாரத் ரயில் சேவையை தொடர்ந்து வந்தே பாரத் மெட்ரோ ரயில் சேவையும் தமிழகத்தில் தொடங்கப்பட உள்ளது. சென்னை பெரம்பூர் ரயில்பெட்டி தொழிற்சாலையில் ஏற்கனவே வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வரும் சூழலில், வந்தே பாரத் மெட்ரோ ரயில் பெட்டி தயாரிக்கும் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
ஏற்கனவே, வந்தே பாரத் ரயில் பெட்டி தயாரித்து முடித்து சோதனை ஓட்டம் நடைபெற்று முடிந்த நிலையில், அடுத்ததாக வந்தே பாரத் மெட்ரோ ரயில் பெட்டி தயாரிப்பு நிறைவடைந்து இன்று வந்தே பாரத் மெட்ரோ ரயில் சேவை சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, இன்று சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு வந்தே பாரத் மெட்ரோ ரயில் கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து காலை 9.30 மணிக்கு ரயில் புறப்பட்டு, காலை 10.10க்கு வில்லிவாக்கத்தை அடைந்து இருக்கும் என்றும் அடுத்து, காலை 10.15 மணிக்கு வில்லிவாக்கத்தில் இருந்து புறப்பட்டு, அரக்கோணம் வழியாக காலை 11.55 மணிக்கு காட்பாடியை சென்றடையும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, காட்பாடியில் இருந்து பகல் 12.15 மணிக்கு ரயில் புறப்பட்டு, பிற்பகல் 2 மணி அளவில் சென்னை கடற்கரையை வந்தே பரத் மெட்ரோ ரயில் சேவை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை ஓட்டத்தின் போது, மணிக்கு 180 கி.மீ வேகம் வரை ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை ஓட்டம் நிறைவடைந்த பிறகு, ரயில் சேவை பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்டுகிறது.
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…