180 கி.மீ வேகத்தில் பறக்கும் வந்தே பாரத் மெட்ரோ.! தமிழகத்தில் சோதனை ஓட்டம் தொடக்கம்.!

Vande Bharat Metro Train

சென்னை : வந்தே பாரத் ரயில் சேவையை தொடர்ந்து வந்தே பாரத் மெட்ரோ ரயில் சேவையும் தமிழகத்தில் தொடங்கப்பட உள்ளது. சென்னை பெரம்பூர் ரயில்பெட்டி தொழிற்சாலையில் ஏற்கனவே வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வரும் சூழலில், வந்தே பாரத் மெட்ரோ ரயில் பெட்டி தயாரிக்கும் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

ஏற்கனவே, வந்தே பாரத் ரயில் பெட்டி தயாரித்து முடித்து சோதனை ஓட்டம் நடைபெற்று முடிந்த நிலையில், அடுத்ததாக வந்தே பாரத் மெட்ரோ ரயில் பெட்டி தயாரிப்பு நிறைவடைந்து இன்று வந்தே பாரத் மெட்ரோ ரயில் சேவை சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, இன்று சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு வந்தே பாரத் மெட்ரோ ரயில் கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து காலை 9.30 மணிக்கு ரயில் புறப்பட்டு, காலை 10.10க்கு வில்லிவாக்கத்தை அடைந்து இருக்கும் என்றும் அடுத்து, காலை 10.15 மணிக்கு  வில்லிவாக்கத்தில் இருந்து புறப்பட்டு, அரக்கோணம் வழியாக காலை 11.55 மணிக்கு காட்பாடியை சென்றடையும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, காட்பாடியில் இருந்து பகல் 12.15 மணிக்கு ரயில் புறப்பட்டு, பிற்பகல் 2 மணி அளவில் சென்னை கடற்கரையை வந்தே பரத் மெட்ரோ ரயில் சேவை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை ஓட்டத்தின் போது, மணிக்கு 180 கி.மீ வேகம் வரை ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை ஓட்டம் நிறைவடைந்த பிறகு, ரயில் சேவை பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்டுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்