வெள்ளை புலியை கல்லால் தாக்கிய சென்னை இளைஞர்கள்!
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் பீமா என்கிற 6 வயது வெள்ளை புலி இருக்கிறது. இந்த பூங்காவை பார்வையிட வந்த சில இளைஞர்கள் அந்த வெள்ளை புலியை கல்லால் அடித்து காயப்படுத்தினர் இதனை கண்ட பார்வையாளர்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.
இந்த புகாரை அடுத்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட விஜயன். பிரசாத், சந்தோஷ், அருள், சூர்யா, சரத் ஆகிய 6 இளைஞர்களை பிடித்து, விசாரித்தது. பின்னர் அவர்களுக்கு அந்த புலியை தத்தெடுக்கும் நோக்கில் நபர் ஒருவருக்கு ரூ.500 அபராதம் விதித்தனர்.