4 மாதங்களுக்கு பின் திறக்கப்பட்ட வண்டலூர் உயிரியல் பூங்கா…!
கொரோனா ஊரடங்கு மற்றும் தொற்று பரவல் காரணமாக, சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்கா 4 மாதங்களுக்கு பின் திறக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தொற்று பாதிப்பு குறைந்து வருவதையடுத்து, சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி பூங்காக்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா ஊரடங்கு மற்றும் தொற்று பரவல் காரணமாக, சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்கா 4 மாதங்களுக்கு பின் திறக்கப்பட்டுள்ளது. பூங்காவிற்கு வருகை தரும் நபர்களின் பெயர், செல்போன் எண்ணை சேகரித்து அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பூங்காவிற்கு வரும் நபர்கள் கொரோன தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் வண்டலூர் பூங்கா இயக்குனர் கருணாபிரியா, உயிரியல் பூங்கா ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டிருக்கின்றனர் என்றும், வாகன சவாரி ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.