ஜாலிதான்…இன்று முதல் பொதுமக்களுக்கு அனுமதி – வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சென்னை:தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இன்று முதல் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர்கள் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வந்தது.எனினும்,கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அந்த வகையில்,இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஆண்டு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதற்கிடையில்,வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பணிபுரியும் 70 ஊழியர்களுக்கு முன்னதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில்,கடந்த ஜனவரி 17 ஆம் தேதி முதல் பூங்கா மூடப்பட்டது.இதனையடுத்து,தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதையொட்டி,இரவு நேர ஊரங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் போடப்பட்ட முழு ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு நீக்கியது.
இந்நிலையில்,வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இன்று முதல் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர்கள் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததால் வண்டலூர் உயிரியல் பூங்கா மீண்டும் திறக்கப்படுவதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும்,பார்வையாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறும் பூங்கா நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்காக வைக்கப்பட்ட 200 அடி உயர கட்-அவுட் சரிந்து விழுந்ததால் பரபரப்பு.!
April 7, 2025
ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!
April 7, 2025