Vandalur park: வண்டலூர் பூங்கா நுழைவுக் கட்டணம் உயர்வு..! பூங்கா நிர்வாகம் அறிவிப்பு..!
உயிரியல் பூங்காக்களில் உள்ள விலங்குகள், பறவைகள் போன்றவற்றை பராமரிப்பதற்கும், பார்வையாளர்களுக்கான வசதிகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டும் பார்வையாளர் நுழைவுக் கட்டணத்தை மாற்றியமைப்பது இன்றியமையாததாகிவிட்டது. அதன்படி, 16.11.2022 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு உயிரியல் பூங்கா ஆணையத்தின் 21-வது ஆட்சிக் குழுக் கூட்டத்தில் ஒரு முன்மொழிவு வைக்கப்பட்டது. நான்கு உயிரியல் பூங்காக்களின் நுழைவுக் கட்டணத்தை திருத்தியமைப்பதற்கான முன்மொழிவுக்கு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, பேட்டரி வாகனக் கட்டணம் ரூ.100ல் இருந்து ரூ.150-ஆகவும், சஃபாரி வாகனத்திற்கு ரூ.50ல் இருந்து ரூ.150ஆகவும் உயர்வு வீடியோ ஒளிப்பதிவுக்கான கட்டணம் ரூ.500ல் இருந்து ரூ.750-ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக வனத்துறை அறிவிப்பு மாற்றுத்திறனாளிகள், 5 வயதுக்கு உட்பட்டோருக்கு இலவச நுழைவுக் கட்டணம் தொடர்வதாகவும், இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், வேன், டெம்போ பயணிகள், மினி பேருந்து மற்றும் பேருந்துகளுக்கான நிறுத்தக் கட்டணம் மணிக்கணக்கில் இருந்து நாள் கணக்கில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை – அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா – செய்தி வெளியீடு
Environment, Climate Change and Forests Department – Arignar Anna Zoological Park – Press Release
(1/3)#CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/NQg44CN3UZ— TN DIPR (@TNDIPRNEWS) September 4, 2023