இனி ஆன்-லைன் மூலம்..!!! வண்டலூர் பூங்காவில் உள்ள விலங்குகளை பார்க்கலாம்…!! அப்படியொரு வசதி அறிமுகம்…!!

Default Image

வண்டலூர் பூங்காவில் உள்ள விலங்குகளை ஆன்-லைன் மூலம் கண்டுகளிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.வண்டலூர் பூங்காவில் உள்ள விலங்குகளை காண ஆண்டுக்கு 25 லட்சம் பார்வையாளர்கள் வருகை புரிகிறார்கள்.வண்டலூர் பூங்கா நிர்வாகம் பூங்கா நிர்வாகம் ஆன்-லைன் மூலம் Live Str-e-a-m-i-ng என்னும் புதிய வசதியை தமிழ் புத்தாண்டு தினமான நேற்று முதல் முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி சிங்கம், காட்டு மாடு, மனித குரங்கு, சிங்கவால் குரங்கு ஆகிய 4 விலங்குகளை மட்டும் தற்போது ஆன்-லைன் மூலம் காணமுடியும் ஓரிரு நாட்களில் யானை, வெள்ளைபுலி, வங்கபுலி, சிறுத்தை, முதலைகள், நீலகிரி கருங்குரங்கு, கரடி, நீர்யானை உள்பட 16 விலங்குகளை மற்றும் அதன் செயல்பாடுகளையும் நேரடியாக ஆன்-லைன் மூலம் பொதுமக்கள் காணலாம். இந்த வசதி பூங்காவின் www.aazp.in இணையதளத்தில் காணமுடியும்.

மேலும் பூங்காவில் இரவில் தங்கி பகலில் பூங்காவை சுற்றிப்பார்க்கும் புதிய வசதி நேற்று முதல் அமல் படுத்தப்பட்டுள்ளதுஇதற்கான முன்பதிவுகளை பூங்காவின் இணையதளம் (www.aazp.in) மற்றும் https://www.aazp.in/ro-om_sea-r-ch/ என்ற இணைப்பின் மூலமாகவும் முன்பதிவு செய்யலாம். இதன் மூலம் வரும் பார்வையாளர்கள் மாலை 6 மணிக்கு பூங்காவின் ஓய்வு விடுதிக்கு வந்து, இங்கு இரவு தங்கி, மறுநாள் காலை 9 மணிக்கு மின்கல ஊர்தி மூலம் பூங்காவை சிறப்பான முறையில் கண்டுகளிக்கலாம் பின்னர் சிங்கம் மற்றும் மான் உலாவிடத்தை காணவும் முடியும்.இரு பெரியவர்கள் தங்க ரூ.2,000 மற்றும் வரியும், கூடுதலாக தங்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.500 மற்றும் வரியும் செலுத்த வேண்டும்.இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்