“இதுதான் விடியலா?”;டாஸ்மாக் கடை திறப்பு – வானதி சீனிவாசன் எதிர்ப்பு..!
- டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு பாஜக கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவரும்,தமிழக சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் எதிர்ப்பு.
தமிழகத்தில் ஜூன் 21 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி,கொரோனா தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களை தவிர,இதர 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் 5 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு பாஜக கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவரும்,தமிழக சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மேலும்,இதுகுறித்து வானதி சீனிவாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,”ஒவ்வொரு நாளும் நோய் தொற்று ஆயிரக்கணக்கில்.. இறப்பு நூற்றுக்கணக்கில்..டாஸ்மாக் திறப்பு அவசியமா ?? ஒரு வருடத்தில் போட்ட வேஷம் மாறியதோ?? ஒலித்த கோஷம் மறந்ததோ??..இதுதான் விடியலா?” என்று பதிவிட்டுள்ளார்.
ஒவ்வொரு நாளும்
நோய் தொற்று ஆயிரக்கணக்கில்..
இறப்பு
நூற்றுக்கணக்கில் …
டாஸ்மாக் திறப்பு அவசியமா ??
ஒரு வருடத்தில் @CMOTamilnadu@mkstalin
போட்ட வேஷம் மாறியதோ??
ஒலித்த கோஷம் மறந்ததோ??இதுதான் விடியலா??@KanimozhiDMK @Udhaystalin pic.twitter.com/8cdF2ppvPt
— Vanathi Srinivasan (@VanathiBJP) June 11, 2021