டெல்லியில் தேசிய மகளிரணித் தலைவராக பொறுப்பேற்ற வானதி சீனிவாசன்..!
தமிழக பாஜக துணைத் தலைவர்களில் ஒருவராக உள்ள வானதி சீனிவாசனுக்கு பாஜக தேசிய மகளிரணி தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவரை தேசிய மகளிரணித் தலைவராக அக்கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டா கடந்த மாதம் அறிவித்தார். இதைத்தொடர்ந்து, டெல்லியில் இன்று வானதி சீனிவாசன் தேசிய மகளிரணி தலைவராக பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளார்.
தேசிய மகளிரணி தலைவராக பொறுப்பேற்ற பின்னர், பேசிய வானதி சீனிவாசன் பாஜக தமிழகத்திற்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை வழங்கி உள்ளது. பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் ஜே.பி. நட்டா உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.
பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் பாஜக தமிழ் பெண்ணால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையோடு இந்த பதவியை வழங்கி உள்ளது. அந்த நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில் கடினமாக உழைப்பேன் என தெரிவித்தார்.