பாஜகவுக்காக ரஜினி, கமலிடம் ஆதரவு கேட்போம்.! வானதி சீனிவாசன் பேட்டி.!
கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக மகளிர் அணி முக்கிய பொறுப்பில் இருப்பவருமான வானதி சீனிவாசன், இன்று தென் சென்னை பாஜக அலுவலக திறப்பு விழாவிற்கு வந்திருந்தார். அந்த விழா முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து வானதி சீனிவாசன் , நாடாளுமன்ற தேர்தல் குறித்து பல்வேறு தகவல்களை தெரிவித்தார்.
பாஜகவோடு ஒட்டுமில்லை.. உறவுமில்லை.! அதிமுக திட்டவட்டம்.!
அவர் கூறுகையில், நாங்கள் பாஜவுக்காக நாடாளுமன்ற தேர்தலில் அனைவரிடமும் ஆதரவு கேட்போம். ஏன் தேவைப்பட்டால் ரஜினி, கமல், விஜய் என எல்லா நடிகர்களிடமும் நாங்கள் ஆதரவு கேட்போம். ஆதரவு கேட்பது எங்கள் கடமை. அதேபோல் எங்களுக்கு ஆதரவு அளிப்பது அல்லது அளிக்காமல் இருப்பது அவர்களது தனிப்பட்ட விருப்பம் என தெரிவித்தார்.
மேலும், சங்கி எனும் சொல்லை இழிவுபடுத்தும் சொல்லாக சிலர் பயன்படுத்தி வருகின்றனர். சங்கி எனும் சொல்லை பாஜகவில் இருப்பவரை குறிவைத்து ட்ரோல் செய்ய பயன்படுத்துகின்றனர். நாட்டின் நலனை விரும்புபவர்களை சங்கி என்று கூறுகிறார்கள் எனவும், சங்கி கருத்து குறித்து வானதி சீனிவாசன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்டார்.
முன்னதாக, கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மையத் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனை எதிர்த்து வானதி சீனிவாசன் பாஜக சார்பில் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.