வானதி சீனிவாசன், கமல்ஹாசன் பொதுமக்களையும் நேரில் சந்தித்தும், ஆட்டோவில் பயணித்தும் ஆதரவு திரட்டி வருகின்றனர்.
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலை தொடர்ந்து, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் தற்போது வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து, நேற்று கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடம் பாஜக வேட்பாளர் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசனும் வாக்கு சேகரிக்க தொடங்கிவிட்டனர். இதனால், இரண்டு வேட்பாளர்களும் பொதுமக்களையும் நேரில் சந்தித்தும், ஆட்டோவில் பயணித்தும் ஆதரவு திரட்டி வருகின்றனர்.
இன்று காலை கமல்ஹாசன் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் பொதுமக்களுடன் நடைபயிற்சி மேற்கொண்டார். முதலில் கமல்ஹாசன் நடைப்பயிற்சி மேற்கொண்டது அங்கிருந்த யாருக்கும் தெரியவில்லை. சிறிது நேரத்துக்குப் பின்னரே கமல் என தெரிந்தது. அப்போது சாலையோரம் நடந்தவாறு வாக்கு சேகரித்தார்.
ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் கமல் தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை பந்து வீச தேர்வு…
இன்றைய 2-வது போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் குவஹாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானதில் விளையாடி வருகிறது. இந்த…
விசாகப்பட்டினம் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், டெல்லி அணியும் விசாகப்பட்டினத்தில் உள்ள ஜே.எஸ். ராஜசேகர் ரெட்டி அச்-வோட்கா…
டெல்லி : ஒரு காலத்தில் எப்படி கலக்கிக்கொண்டு இருந்தீங்க என்ற கேள்வியை பிரித்வி ஷா பார்த்து நாம் கேட்கலாம். ஏனென்றால்,…
விசாகப்பட்டினம் : இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் கம்மன்ஸ் நாங்கள் பேட்டிங் செய்கிறோம் என பேட்டிங்கை தேர்வு…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டதில் அக்கட்சி தலைவர் விஜய் பேசிய விஷயங்கள் அரசியல்…