“பெண்களின் துன்ப வாழ்க்கைக்கு விடியல் தாருங்கள்; டாஸ்மாக்கை மூடுங்கள்” -வானதி சீனிவாசன்..!
- தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
- அதற்கு எதிர்ப்பு தெரிவித்து,பெண்களின் துன்ப வாழ்க்கைக்கு விடியல் தாருங்கள்,டாஸ்மாக்கை முழுவதுமாக மூடுங்கள் என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் நாளை காலை 6 மணியுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில்,ஜூன் 21 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தளர்வுகளின்படி,கொரோனா தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து,27 மாவட்டங்களில் நாளை முதல் டாஸ்மாக் கடைகளும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து,தமிழகத்தின் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு எதிராக இன்று பாஜகவினர் கருப்பு கொடி ஏந்தி பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதன்படி,கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்,தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மேலும்,இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் “பெண்களின் துன்ப வாழ்க்கைக்கு விடியல் தாருங்கள், டாஸ்மாக்கை முழுவதுமாக மூடுங்கள்,குடியை கெடுக்கும் திமுக”,என்று கூறி பதிவிட்டுள்ளார்.
பெண்களின் துன்ப வாழ்க்கைக்கு #விடியல் தாங்க@CMOTamilnadu@mkstalin
டாஸ்மாக்கை முழுவதுமாக மூடுங்கள் .#குடியைக்கெடுக்கும்திமுக @BJP4TamilNadu @Murugan_TNBJP pic.twitter.com/fDQhjPEeHM— Vanathi Srinivasan (@VanathiBJP) June 13, 2021