கோவை அரசு மருத்துவமனைக்கு இரண்டு இலவச அமரர் ஊர்தியை வழங்கிய வானதி சீனிவாசன்..!

Default Image

கோவை அரசு மருத்துவமனைக்கு இரண்டு இலவச அமரர் ஊர்தியை வானதி சீனிவாசன் வழங்கியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையானது மிகவும் தீவிரமடைந்து வருகிறது.அனைத்து தொகுதி எம்.எல்.ஏக்களும் கட்சி பாகுபாடின்றி களமிறங்கி மக்களுக்கு உதவ வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.அதன்படி,தற்போது எம்.எல்.ஏக்கள் அனைவரும் அந்தந்த தொகுதிகளில் கொரோனா நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில்,கோவை அரசு மருத்துவமனையை பார்வையிட்ட எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கோவை அரசு மருத்துவமனைக்கு இரண்டு அமரர் ஊர்தி வாகனங்களை இலவசமாக வழங்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து,எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து கூறியதாவது,”கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 2 இலவச அமரர் ஊர்தி வாகனங்களை வழங்கினேன்”,என்று கூறி அதன் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக, எம்.எல்.ஏ.வானதி ஸ்ரீனிவாசன் பாஜக சார்பில் நடமாடும் நீராவி வாகனத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்