இறந்து போன காங்கிரஸ்.! ராகுல் காந்தி நடைப்பயணத்தை விமர்சித்த எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன்.!

Default Image

இறந்து போன காங்கிரஸ் கட்சிக்கு, ராகுல் காந்தியின் நடை பயணம் எந்த பயனையும் தர போவதில்லை என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன். 

காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி இன்று முதல் பாரத ஒற்றுமை யாத்திரை எனும் பாதயாத்திரை மூலம் 150 நாட்களில்  கன்னியாகுமரி தொடங்கி 3,570 கிமீ தூரம் பயணித்து காஷ்மீர் வரை சென்றடைய உள்ளார்.

இதற்கு பல அரசியல் கட்சியினர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். வழக்கம் போல பாஜகவினர் இந்த யாத்திரையை விமர்சித்து வருகின்றனர். அதில் கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.

அவர் ஒரு விழாவில் பேசுகையில், ‘ காங்கிரஸ் கட்சி இறந்து போயுள்ளது.அக்கட்சிக்கு, ராகுல் காந்தியின் நடைபயணத்தின் மூலம் உயிரூட்ட முடியுமா என முயற்சி செய்கிறார்கள். காங்கிரஸ் ஒரு மூழ்கிய கப்பல். ராகுல் காந்தி நடந்தாலும் சரி, ஓடினாலும் சரி, மாரத்தான் ஓடினால் கூட எந்த பயனும் இல்லை ‘ என கடுமையாக விமர்சித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்