‘வானதி அக்கா… ஜிந்தகி பக்கா…’ – கோவையில் ஹிந்தியில் வாக்கு சேகரிக்கும் பாஜகவினர்…!

கோவையில், வானதி சீனிவாசனை ஆதரித்து, பாஜக தொண்டர்கள், ‘வானதி அக்கா… ஜிந்தகி பக்கா…’ என ஹிந்தியில் கோஷமிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஏப்.6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால், அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலுக்கு சொற்ப நாட்களே உள்ள நிலையில், அனைத்து கட்சியினர், வித்தியாசமான முறையில் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கோவை தெற்கு தொகுதியில், அதிமுக சார்பில், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் அவர்கள் போட்டியிடுகிறார். இந்நிலையில், கோவையில், வானதி சீனிவாசனை ஆதரித்து, பாஜக தொண்டர்கள், ‘வானதி அக்கா… ஜிந்தகி பக்கா…’ என ஹிந்தியில் கோஷமிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே, ஹிந்தி திணிப்புக்கு எதிராக அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
உடனே வெளியேறுங்கள்.., 27ம் தேதி வரை தான் டைம்.! பாக். நாட்டினருக்கு விசா சேவை நிறுத்தம்.!
April 24, 2025
இந்தியா vs பாகிஸ்தான் : நதிநீர் நிறுத்தம், மருத்துவ சேவை நிறுத்தம்., பாக். வான்வழி தடை!
April 24, 2025