5 ஆம் வகுப்பு வரை தாய்மொழியில் கல்வி அறிவிப்புக்கு வைரமுத்து வரவேற்பு.!
5ஆம் வகுப்பு வரை தாய்மொழியில் கல்வி கட்டாயம் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு வைரமுத்து வரவேற்றுள்ளார்.
நேற்று முன் தினம் புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் அமித் கரே செய்தியாளர்களிடம் சந்தித்து விளக்கம் அளித்தார்.
அப்பொழுது அவர் கூறுகையில்:
- 3 வயது முதல் குழந்தைகளின் கல்வி கண்காணிக்கப்படும் புத்தகங்கள் மட்டுமின்றி செய்முறை விளையாட்டுகள் மூலம் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்படும்.
- 5 ஆம் வகுப்பு வரை தாய்மொழிக்கல்வியில் கற்பிக்கும் முறை இருக்க வேண்டும்.
- மேலும் 8-ஆம் வகுப்பு வரை தாய் மொழிக்கல்வியில் கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- ஆறாம் வகுப்பு முதல் தொழிற்பயிற்சி பாடங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று தெவித்தார்.
இந்நிலையில் தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறுகையில், “ஐந்தாம் வகுப்புவரை தாய்மொழியில் கல்வி கட்டாயம் என்று மத்திய அரசு வரையறுத்திருப்பது வரவேற்கத்தக்கது”. ஆனால், அது அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் சட்டப்படியும் திட்டப்படியும் கட்டாயம் என்ற உறுதிச் சொற்களால் உரைக்கப்பட வேண்டுமென்று தெரிவித்துள்ளார்.
ஐந்தாம் வகுப்புவரை தாய்மொழியில் கல்வி கட்டாயம் என்று நடுவண் அரசு பொதுவாக வரையறுத்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், அது அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் சட்டப்படியும் திட்டப்படியும் கட்டாயம் என்ற உறுதிச் சொற்களால் உரைக்கப்பட வேண்டுமென்று கல்வி உலகம் கருதுகிறது.#தமிழ்
— வைரமுத்து (@Vairamuthu) July 30, 2020