“போ புயலே போய் விடு”- நிவர் புயல் குறித்து வைரமுத்து ட்வீட்.!
நிவர் புயல் குறித்து கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் “போ புயலே போய் விடு” என்ற கவிதையை பதிவிட்டுள்ளார்.
வங்க கடலில் உருவான நிவர் புயலானது தற்போது புதுச்சேரியில் இருந்து 320 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும் ,இதனால் புதுச்சேரி கடல் சீற்றத்துடன் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.மேலும் இந்த நிவர் புயல் அதி தீவிர புயலாக மாறி காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே இன்று இரவு கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் நிவர் புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 130 முதல் 140கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
அப்போது நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை, திருவாரூர் மற்றும் புதுச்சேரியில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் இந்த நிவர் புயல் காரணமாக பல இடங்களில் மக்களை பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது இந்த அதிதீவிர நிவர் புயல் குறித்து கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில்
“போ புயலே
போய்விடு
பச்சைமரம் பெயர்த்துப்
பல் துலக்காமல்
வேய்ந்தவை பிரித்து
விசிறிக் கொள்ளாமல்
குழந்தையர் கவர்ந்து
கோலியாடாமல்
பாமர உடல்களைப்
பட்டம் விடாமல்
சுகமாய்க் கடந்துவிடு
சுவாசமாகி விடு
ஏழையரின்
பெருமூச்சை விடவா நீ
பெருவீச்சு வீசுவாய்? ” என்று குறிப்பிட்டுள்ளார்.
போ புயலே
போய்விடுபச்சைமரம் பெயர்த்துப்
பல் துலக்காமல்வேய்ந்தவை பிரித்து
விசிறிக் கொள்ளாமல்குழந்தையர் கவர்ந்து
கோலியாடாமல்பாமர உடல்களைப்
பட்டம் விடாமல்சுகமாய்க் கடந்துவிடு
சுவாசமாகி விடுஏழையரின்
பெருமூச்சை விடவா நீ
பெருவீச்சு வீசுவாய்?#NivarCyclone #Nivar— வைரமுத்து (@Vairamuthu) November 25, 2020