“கொரோனாவை வெல்ல முக்கூட்டணி” – வைரமுத்து ட்வீட்!
- முக்கூட்டணியால் மட்டுமே கொன்றழிக்கும் கொரோனாவை வென்றெடுக்க முடியும் என்று வைரமுத்து ட்வீட் செய்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலையானது கடந்த மாதத்தில் பெரும் உச்சத்தை எட்டியது.ஆனால்,அதன்பின்னர் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கு காரணமாக தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது.
எனினும்,தமிழகத்தில் வருகின்ற ஜூன் 21 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில்,கவிஞர் வைரமுத்து அவர்கள்,”காக்கும் அரசு,கட்டுப்படும் மக்கள்,தடையில்லாத் தடுப்பூசி இந்த முக்கூட்டணியால் மட்டுமே கொன்றழிக்கும் கொரோனாவை வென்றெடுக்க முடியும்”,என்று கூறி பதிவிட்டுள்ளார்.
காக்கும் அரசு
கட்டுப்படும் மக்கள்
தடையில்லாத் தடுப்பூசிஇந்த
முக்கூட்டணியால் மட்டுமே
கொன்றழிக்கும் கொரோனாவை
வென்றெடுக்க முடியும்#Corona— வைரமுத்து (@Vairamuthu) June 14, 2021
முன்னதாக,தளர்வுகள் தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று கூறுகையில்,”கொரோனா காலகட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மீறப்படுமானால், எந்த நேரத்திலும் ஊரடங்கு தளர்வு திரும்பப் பெறப்படும் எனவும்,தமிழக மக்கள் காவல்துறையின் கண்காணிப்பு இல்லாமலேயே கட்டுப்பாடுள்ள மக்களாக இருக்க வேண்டுமென தான் விரும்புவதாகவும், அந்த விருப்பத்தை தமிழக மக்கள் நிச்சயம் நிறைவேற்றுவார்கள் நம்புகிறேன்” என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.