தனது தத்துவங்களால் கலைஞர் வாழ்த்து கொண்டிருப்பார்! கவிப்பேரரசு வைரமுத்து உருக்கம்!
சென்றாண்டு இதேநாளில் முன்னள் முதலமைச்சரும் திமுக தலைவருமனா கலைஞர் மு.கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இன்று அவரின் முதலாமாண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டு அவருக்கும் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
சென்னையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் காலை 8 மணிக்கு அமைதி ஊர்வலம் நடைபெற்றது. இதில் திமுக அமைச்சர்கள், முக்கிய தலைவர்களை, சுமார் 5000 திமுக தொடர்கள் கலந்து கொண்டனர்.
அவரது மறைவு குறித்து கவிப்பேரரசு வைரமுத்து, ‘மறைந்தாலும் தனது தத்துவங்களால் வாழ்ந்து கொண்டிருப்பார் கருணாநிதி.’ என தனது கருத்து தெரிவித்து இரங்கலை வெளிப்படுத்தினர்.