வேல் யாத்திரைக்கு அனுமதி கோரி, தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பாஜக பொதுச்செயலாளர்.
திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை, நவ.6 முதல் டிச.6 வரை வேல் யாத்திரை நடத்த பாஜக அரசு திட்டமிட்டிருந்தது. இதற்கு பல அரசியல் கட்சி பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சென்னையை சேர்ந்த பத்திரிக்கையாளர்களான பாலமுருகன் மற்றும் செந்தில் குமார் இருவரும் வேல் யாத்திரை நடத்த தடை விதிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், இந்த யாத்திரை மூலம் கொரோனா தொற்று பரவும் அச்சுறுத்தல் உள்ளதால், தமிழக அரசு சார்பில் வேல் யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டது.ஆனால், இந்த தடையை மீறி நேற்று வேல் யாத்திரை நடைபெற்ற நிலையில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், எச்.ராஜா, பொன்ராதாகிருஷ்ணன் உட்பட பல முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், வேல் யாத்திரைக்கு அனுமதி மறுத்த தமிழக டி.ஜி.பி உத்தரவை எதிர்த்து, இந்த யாத்திரைக்கு அனுமதி அளிக்க கோரி, பாஜக பொதுச்செயலாளர் மனு அளித்துள்ளார். இந்த வழக்கு, நீதிபதி சத்யநாராயணா மற்றும் ஹேமலதா அமர்வு முன்பு அவசர வழக்காக விசாரணைக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை : இளம் தமிழ் இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார். உடல் நலம் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று (வெள்ளிக்கிழமை)…
சென்னை : தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் திருத்துவதற்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமையும் முகாம் நடைபெறவுள்ளது.…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பனுக்கு உகந்த கார்த்திகை மாதம் இன்று (16.11.2024) முதல்…
உத்தரப்பிரதேசம் : ஜான்சி மாவட்டத்தில் மகாராணி லட்சுமிபாய் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்றிரவு நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில், பச்சிளம்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…