வைகோவின் மாநிலங்களவை வேட்புமனு ஏற்கப்பட்டது!

மாநிலங்களவைத் தேர்தலுக்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தாக்கல் செய்த வேட்புமனு ஏற்கப்பட்டது.கடந்த வாரம் வைகோ மீது தேசத்துரோக வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ 10,000 அபராதம் விதிக்கப்பட்டது.ஆனால் இந்த தண்டனை ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டது .
இந்நிலையில் திமுக சார்பில் கொடுக்கப்பட்ட வாய்ப்பின் அடிப்படையில் வைகோ மாநிலங்களவைக்கான வேட்புமனு தாக்கல் செய்தார்.வைகோவின் வேட்புமனு ஏற்க்கப்படுமா ? என்ற நிலையில் இருந்தது. தற்போது வைகோவின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில்,வைகோவின் மனுவை நிராகரிக்க எந்த முகாந்திரமும் இல்லை.எனவே வைகோ தாக்கல் செய்த வேட்புமனு ஏற்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
April 30, 2025