#BREAKING : வைகோவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனை நிறுத்திவைப்பு- உயர் நீதிமன்றம் உத்தரவு
2009-ம் ஆண்டு நடத்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வைகோ மீது தேசதுரோக வழக்கு தொடரப்பட்டது. தேசதுரோக வழக்கிற்காக வைகோவிற்கு ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ,ரூ 10,000 அபராதம் விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவு விட்டது.
இதனால் வைகோ தேசதுரோக வழக்கில் வழங்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.இதில் தனக்கு கொடுத்த ஓராண்டு சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இன்று இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் , வைகோவுக்கு சிறப்பு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனை நிறுத்திவைப்பதாக அறிவித்தது.மேலும் இந்தியாவின் ஒருமைப்பாட்டை பாதிக்காத வகையில் பேசுமாறு வைகோவுக்கு நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.