தேசதுரோக வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து வைகோ மேல்முறையீடு
2009-ம் ஆண்டு நடத்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வைகோ மீது தேசதுரோக வழக்கு தொடரப்பட்டது. தேசதுரோக வழக்கிற்காக வைகோவிற்கு ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ,ரூ 10,000 அபராதம் விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவு விட்டது.
இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தேசதுரோக வழக்கில் வழங்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து உள்ளார்.அந்த மனுவில் வைகோ கூறுகையில் ,தனக்கு எதிரான தீர்ப்பு சட்ட விரோதமானது . சட்டப்படி தீர்ப்பு வழங்காமல் சிறப்பு நீதிமன்றம் அவர்களுக்கு தெரிந்த விஷயங்களை வைத்து தீர்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.தனக்கு எதிரான வழக்கில் ஆதாரம் , சாட்சிகள் இல்லாமல் தீர்ப்பு தரப்பட்டு உள்ளது.
எனவே தனக்கு கொடுத்த ஓராண்டு சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.வைகோவின் மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வர வாய்ப்பு உள்ளது.