மதிமுக பொதுச்செயலாளராக வைகோ மீண்டும் போட்டியின்றி தேர்வாகிறார்.
மதிமுகவில் உட்கட்சி தேர்தல் வரும் ஜூன் 14-ம் தேதி முதல் நடைபெற உள்ளது. கட்சியின் தலைவர், பொதுச்செயலாளர், துணை பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதில் மதிமுகவைச் சேர்ந்த பலர் போட்டியிடுகின்றனர். ஜூன் 1-ம் தேதி வேட்புமனுவை திரும்ப பெற கடைசி நாள் என்றும், ஜூன் 14-ம் தேதி நடைபெறும் மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் உட்கட்சி தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மதிமுக பொதுச்செயலாளராக வைகோ மீண்டும் போட்டியின்றி தேர்வாகிறார். மதிமுக உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் வைகோ போட்டியின்றி தேர்வாகவுள்ளார். இதுபோன்று, மல்லை சத்யா உள்ளிட்ட 5 பேர் மதிமுகவின் துணை பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட உள்ளனர். இதுதொடர்பான அறிவிப்பு ஜூன் 3-ல் வெளியாகும் என கூறப்படுகிறது.
மேலும், மதிமுக அவை தலைவராக திருப்பூர் துரைசாமிக்கு பதில் அர்ஜுன் ராஜ் போட்டியின்றி தேர்வாகவுள்ளார். துரை வைகோ முதன்மை செயலாளராகவும், பொருளாளராக செந்திலதிபனும் உள்ளிட்ட நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜூன் 14 கட்சியின் பொதுக்குழு சென்னையில் நடைபெற உள்ளது. இதற்கு முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…
தூத்துக்குடி : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
சென்னை : இன்று பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு தினம் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் பெண்கள் பாதுகாப்பு…
சென்னை : சினிமாவை பொறுத்தவரையில் நடிகர்களுக்குள் போட்டிகள் இருந்தாலும் அது ஆரோக்கியமான போட்டியாகத் தான் இருக்கும். அந்த போட்டியை சினிமாவை…