தமிழக அரசின் பட்ஜெட், தமிழக மக்களுக்கு ஏமாற்றத்தைத்தான் பரிசாக தந்திருக்கிறது!

Default Image

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசின் பட்ஜெட் நேற்று காலையில் தாக்கல் செய்யப்பட்டது. சட்டசபையில் பட்ஜெட் உரையை  வாசித்தார்.

தமிழக அரசின் பட்ஜெட், தமிழக மக்களுக்கு ஏமாற்றத்தைத்தான் பரிசாக தந்திருக்கிறது என்று ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். பட்ஜெட் குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது ,எடப்பாடி பழனிசாமி அரசின் வரவு செலவுத் திட்டம் தமிழக மக்களுக்கு ஏமாற்றத்தைத்தான் பரிசாக தந்திருக்கிறது. தமிழ்நாட்டில் சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறையினர் பெரும் நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளனர். இதற்கான தீர்வு எதுவும் இல்லை. உள்ளாட்சித் தேர்தல் பற்றிய திட்டவட்டமான அறிவிப்பு இல்லாதது கண்டனத்துக்கு உரியது.

மத்திய அரசின் அநீதி, மாநில உரிமைகள் பறிப்பு இவற்றை வரவு செலவுத் திட்டத்தில் சுட்டிக்காட்டி இருக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரும் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கவும் போதிய அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும்.

காவிரி டெல்டாவைப் பாலைவனமாக்கி முற்றாக அழிக்கும் திட்டங்களைச் செயல்படுத்த ஜனவரி 19 ஆம் தேதி மத்திய அரசு ‘குளோபல் டென்டர்’ விட்டுள்ளது. மத்திய அரசின் நாசகாரத் திட்டங்களுக்கு அ.தி.மு.க. அரசு துணைபோயிருப்பது இந்த நிதிநிலை அறிக்கையில் அப்பட்டமாகத் தெரிகிறது. இதுகுறித்து கண்டனம் தெரிவிக்காதது ஏன்?” என்று வைகோ தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்