#BREAKING : வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா – கேரளா செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

Published by
லீனா

கேரளாவில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவில் முதல்வர் பினராய் விஜயனுடன் பங்கேற்கிறேன் என முதல்வர் பேச்சு.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 110 விதியின் கீழ் பேரவையில் உரையாற்றி வருகிறார். வைக்கம் போராட்டத்தில் ஈடுபட்டு 74 நாட்கள் சிறையிலிருந்தார் பெரியார். பெரியார் காட்டிய சமூகநீதி பாதையில் திமுக அரசு பயணிக்கிறது.

வைக்கம் போராட்ட நூறாண்டு விழா 

வைக்கம் போராட்டம் தொடங்கிய நூற்றாண்டின் தொடக்க நாள் இன்று; வரலாற்றின் முழு முக்கியமான நாள் வைக்கம் போராட்டம் வெற்றி பெறக் காரணமாக இருந்த பெரியாரை போற்றும் விதமாக வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பை வெளியிடுகிறேன்.

ஒன்னறை ஆண்டுகளுக்கும் மேல் நடந்த வைக்கம் போராட்டம், 1925 நவம்பர் 23ம் நாள் முடிவுக்கு வந்தது. அதே ஆண்டு நவம்பர் 29ம் தேதி பெரியார் தலைமையில் வைக்கத்தில் வெற்றி விழாவும் நடைபெற்றது.

இந்தியாவில் நடந்த அனைத்து கோயில் நுழைவுப் போராட்டங்கள் அனைத்துற்கும் முன்னோடியாக திகழ்ந்தது வைக்கம் போராட்டம் ஒடுக்கப்பட்டவர்கள் சமத்துவ உரிமையைப் பெறுவதில் முதற்படியாக அமைந்தது என்று சொன்னால் அது மிகையல்ல.

வைக்கம் ஆலய நுழைவுப் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு அரசு சிறப்பாக கொண்டாட இருக்கிறது. ஓராண்டு முழுவதும் அப்போராட்டத்தின் நோக்கத்தையும், வெற்றியையும் பொதுமக்கள், மாணவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் நிகழ்ச்சி நடத்தப்படும்.

கேரளா செல்கிறார் முதல்வர் 

கேரளாவில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவில் முதல்வர் பினராய் விஜயனுடன் பங்கேற்கிறேன். பெரியார் என்பவர் தமிழகத்திற்கு மட்டும் சொந்தமானவர் அல்ல மொழி மற்றும் நாடு கடந்தவர் பெரியார்.

வைக்கம் விருது

வைக்கம் போராட்டத்தில் பெரியார் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்ட அருவிக்குத்து கிராமத்தில் அவருக்கு நினைவிடம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். செப்டம்பர் 17ம் தேதி சமூக நீதி நாள் அன்று தமிழ்நாடு அரசால் வைக்கம் விருது வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

இன்று 5 மாவட்டங்களுக்கு கனமழை… 15ம் தேதி தென் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.!

இன்று 5 மாவட்டங்களுக்கு கனமழை… 15ம் தேதி தென் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.!

சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

11 hours ago

“மார்ச் 23ல் ஐபிஎல் தொடர் தொடக்கம்” பிசிசிஐ அறிவிப்பு!

டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…

11 hours ago

மகள் – மனைவியுடன் கியூட் உரையாடல்… மகனுடன் வெற்றியை பகிர்ந்து கொண்ட அஜித் குமார்.!

துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…

12 hours ago

அதிமுக, தேமுதிக-வை தொடர்ந்து இடைத்தேர்தலை புறக்கணித்த பாஜக!

ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…

12 hours ago

கார் ரேஸில் வாகை சூடிய அஜித்… தேசிய கொடியோடு வெற்றி கொண்டாட்டம்! – வைரல் வீடியோ..

துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…

13 hours ago

“முதல்வரின் ஆணவம் நல்லதல்ல” முதலமைச்சருக்கு ஆளுநர் மாளிகை கண்டனம்.!

சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…

13 hours ago