முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை..! தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்த சு.வெங்கடேசன் எம்.பி…!
கடும் மழைப் பொழிவின் காரணமாக வைகை அணை தனது முழுக் கொள்ளளவினை எட்டியுள்ள நிலையில், உசிலம்பட்டி 58 கால்வாய் திட்டத்திற்கு நீர் திறந்து விட, முதல்வர் நடவடிக்கை எடுக்க கோரி சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட்.
மதுரை : தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக, பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நிலையில், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
இதற்கிடையில், அணைகள் மற்றும் ஏரிகள் நிரம்பி வரும் நிலையில், பல இடங்களில் அணைகள் திறந்து விடப்பட்டுள்ளது. அந்த வகையில், வெங்கடேசன் எம்.பி. அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கடும் மழைப் பொழிவின் காரணமாக வைகை அணை தனது முழுக் கொள்ளளவினை எட்டியுள்ளது. ஆனாலும் தற்போது வரை உசிலம்பட்டி 58 கால்வாய் திட்டத்திற்கு இன்னும் நீர் திறக்கப்படவில்லை. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாக தலையிட்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
கடும் மழைப் பொழிவின் காரணமாக வைகை அணை தனது முழுக் கொள்ளளவினை எட்டியுள்ளது. ஆனாலும் தற்போது வரை உசிலம்பட்டி 58 கால்வாய் திட்டத்திற்கு இன்னும் நீர் திறக்கப்படவில்லை.
தமிழக முதல்வர் @CMOTamilnadu இதில் உடனடியாக தலையிட்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.#vaigaiDam pic.twitter.com/Uicqj2ZWz2
— Su Venkatesan MP (@SuVe4Madurai) November 11, 2021